» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

குல்தீப், பாண்டியா அசத்தல்: சூப்பர் 8 சுற்றில் வங்கதேசத்தை வென்றது இந்தியா!

ஞாயிறு 23, ஜூன் 2024 9:25:03 AM (IST)



ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ சுற்று குரூப் 1 போட்டியில் வங்கதேசத்தை 50 ரன்களில் வென்றது இந்தியா.

மேற்கு இந்தியத் தீவுகளின் ஆன்டிகுவாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீசியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. ரோகித் 23, கோலி 37, ரிஷப் பந்த் 36, ஷிவம் துபே 34 மற்றும் ஹர்திக் பாண்டியா 50 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் ரிஷாத் மற்றும் தன்சிம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷகிப், 1 விக்கெட் வீழ்த்தினார்.

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டியது. முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி. லிட்டன் தாஸ் 13, ஹசன் 29, தவ்ஹித் 4, ஷகிப் 11, கேப்டன் ஷான்டோ 40, ஜாகிர் அலி 1, ரிஷாத் 24 மற்றும் மஹ்மதுல்லா 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது அந்த அணி. இதன் மூலம் 50 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் குல்தீப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அர்ஷ்தீப் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஹர்திக் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை ஹர்திக் பாண்டியா வென்றார். இந்த தொடரில் இதுவரை தோல்வியை தழுவாத அணியாக இந்தியா உள்ளது. அடுத்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory