» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தவறு செய்துவிட்டேன்; அரையிறுதி தோல்விக்கு ஜோஸ் பட்லர் விளக்கம்!

வெள்ளி 28, ஜூன் 2024 5:32:07 PM (IST)



இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இருந்தபோதிலும் மொயின் அலிக்கு பந்துவீச வாய்ப்பளிக்காமல் தவறு செய்துவிட்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாதது ஏமாற்றமளிக்கிறது. இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இந்த வெற்றிக்கு இந்திய அணி மிகவும் தகுதியானவர்களே. 140 அல்லது 150 ரன்களுக்குள் இந்திய அணியை கட்டுப்படுத்திவிடலாம் என நினைத்தோம். ஆனால், அவர்கள் அதிக ரன்கள் குவித்துவிட்டனர்.

திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை. பவர் பிளேவில் எங்களுக்கு சிறிது அதிர்ஷ்டம் இல்லை என நினைக்கிறேன். பந்துவீச்சில் மொயின் அலியை பயன்படுத்தவில்லை. ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்றாக இருந்ததால், அவரைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அவரைப் பந்துவீச்சில் பயன்படுத்தாமல் தவறு செய்துவிட்டேன் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory