» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியர் ஹாக்கி அணி வீரர்கள் தேர்வு

செவ்வாய் 6, ஆகஸ்ட் 2024 10:47:07 AM (IST)

கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியர் ஹாக்கி அணி வீரர்களுக்கான தேர்வு நடைபெற்றது.

ராணிப்பேட்டையில் ஆக.15ஆம் தேதிமுதல் 18ஆம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஆண்கள் சப் - ஜூனியர் ஹாக்கி சாம்பியன் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியர் ஹாக்கி அணி வீரர்கள் தேர்வு, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 80-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் அஸ்வின், உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்வுக் குழு உறுப்பினர்களாக செயல்பட்டனர். 

இதில், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமியில் இருந்து அஸ்வின்ராஜா, சுபாஷ், முகேஷ்குமார், பரத், கார்த்திக், கபிலன், கோகுலகிருஷ்ணன், சஞ்சய், யோகேஷ்ராஜா, வேல்குமார், ராகுல், மாதேஷ், ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழகத்திலிருந்து சூரியபாண்டியன், முகுந்தன், பிரின்ஸ் டேனியல், சந்தோஷ், கூசாலிபட்டி ஏ.எம்.சி. ஹாக்கி அணியில் இருந்து கருணாகர பாண்டியன், முத்து ராஜேஷ், புனித பவுல் மெட்ரிகுலேஷன் பள்ளியிலிருந்து சக்திவேல், தனுஷ்கோடி பாண்டி, வேல்ஸ் ஹாக்கி அகாதெமியில் இருந்து ராகுல் கார்த்திக், கயத்தாறு மகாசக்தி ஹாக்கி கிளப்பில் இருந்து இசக்கிராஜா,  இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஜீவா, பாண்டவர்மங்கலம் ஹாக்கி அணியில் இருந்து மோகன், ரோஷன் திவான் ராவ், இலுப்பையூரணி ஹாக்கி அணியில் இருந்து ஹரிஷ்,  அம்பேத்கர் ஹாக்கி அணியில் இருந்து ஈஸ்வர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஏற்பாடுகளை ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா, வழக்கறிஞர் பெரியதுரை, காளிதாஸ், வேல்முருகன், மணிகண்டன், மனோஜ் குமார் ஆகியோர் செய்திருந்தனர். தேர்வான அனைத்து வீரர்களுக்கும் இம்மாதம் 11ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு நேஷனல் பொறியியல் கல்லூரி ஹாக்கி மைதானத்தில் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. எனவே, தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பயிற்சி முகாமில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும என ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலர் குருசித்ர சண்முக பாரதி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory