» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் இடம் பிடித்த ரிஷாப் பன்ட்!

வியாழன் 26, செப்டம்பர் 2024 11:47:35 AM (IST)



ஐ.சி.சி., டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ரிஷாப் பன்ட் (நம்பர்-6) மீண்டும் இடம் பிடித்தார்.

டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட், 731 புள்ளிகளுடன் நம்பர்-6 இடத்தை கைப்பற்றினார். கடந்த 2022, டிச. 30ல் கார் விபத்தில் சிக்கிய ரிஷாப் பன்ட், 632 நாளுக்குப் பின் சென்னை டெஸ்டில் பங்கேற்றார். இதில் சதம் (109) விளாசியதால், டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் இடம் பிடித்தார்.

சென்னை டெஸ்டில் அரைசதம் (56) விளாசிய துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 751 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறினார். இப்போட்டியில் சதம் (119*) விளாசிய மற்றொரு இந்திய வீரர் சுப்மன் கில் (701 புள்ளி) 5 இடம் முன்னேறி, 14வது இடத்தை கைப்பற்றினார். பேட்டிங்கில் ஏமாற்றிய கேப்டன் ரோகித் சர்மா (716 புள்ளி), விராத் கோலி (709) முறையே 10, 12வது இடத்துக்கு தள்ளப்பட்டனர். முதலிடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (899) நீடிக்கிறார்.

அஷ்வின் நம்பர்-1: டெஸ்ட் பவுலர் தரவரிசையில் இந்தியாவின் அஷ்வின் (871 புள்ளி) முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். சென்னை டெஸ்டில் சுழலில் அசத்திய இவர் 6 விக்கெட் சாய்த்தார். மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் ரவிந்திர ஜடேஜா (5 விக்கெட், 804 புள்ளி) 6வது இடத்துக்கு முன்னேறினார். இப்போட்டியில் வேகத்தில் மிரட்டிய (5 விக்கெட்) இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா (854) 2வது இடத்தில் தொடர்கிறார்.

ஜடேஜா முதலிடம்: சென்னை டெஸ்டில் ஆல்-ரவுண்டராக அசத்திய இந்தியாவின் ஜடேஜா (86 ரன், 5 விக்கெட், 475 புள்ளி), அஷ்வின் (113 ரன், 6 விக்கெட், 370) முதலிரண்டு இடங்களில் நீடிக்கின்றனர். இதில் அஷ்வின் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory