» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒரே இன்னிங்ஸில் 498 ரன்கள் குவித்து துரோணா தேசாய் சாதனை

வியாழன் 26, செப்டம்பர் 2024 12:42:19 PM (IST)



ஒரே இன்னிங்ஸில் 498 ரன்கள் குவித்து இளம் வீரர் துரோணா தேசாய் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். 

19 வயதுக்கு உட்பட்டோருக்கான திவான் பல்லுபாய் கோப்பை கிரிக்கெட் தொடர் குஜராத்தில் உள்ள காந்தி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு ஆட்டத்தில் செயின்ட் சேவியர்ஸ் (லயோலா) - ஜேஎல் இங்கிலிஷ் பள்ளி அணிகள் ஷிவாய் மைதானத்தில் விளையாடின. இதில் செயின்ட் சேவியர்ஸ் அணிக்காக களமிறங்கிய 18 வயது பேட்ஸ்மேனான துரோணா தேசாய் 320 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 86 பவுண்டரிகளுடன் 498 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் துரோணா தேசாய், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இணைந்தார். இதற்கு முன்னர் மும்பையின் பிரணவ் தனவாடே (1009*), பிரித்வி ஷா (546), ஹவேவாலா (515), சமன்லால் (506*), அர்மான் ஜாபர் (498) ஆகியோரும் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்களை வேட்டையாடி இருந்தனர். துரோணா தேசாயின் அபாரமான ஆட்டத்தால் செயின்ட் சேவியர்ஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 712 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory