» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கான்பூர் டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

செவ்வாய் 1, அக்டோபர் 2024 3:04:43 PM (IST)



கான்பூரில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று (அக். 1) காலை தொடங்கியது. கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதையடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்களை திரட்டியது. 

இதையடுத்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி, நான்காவது நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. அதனைத்தொடர்ந்து, ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சில் வங்கதேசம் 146 ரன்களுக்கு சுருண்டது. இதனைத் தொடர்ந்து, 95 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்த இந்திய அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்களை எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory