» சினிமா » செய்திகள்

சசிகலாவுக்கு சிறை: தமிழ் திரையுலகினர் வரவேற்பு!!

செவ்வாய் 14, பிப்ரவரி 2017 4:40:14 PM (IST)



சொத்துக்குவிப்பு வழ்ககில் சசிகலாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு தமிழ் திரையுலகினரின் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

ஊழல் செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழ்ககில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இவர்களுக்கு தலா 4 வருட சிறைத்தண்டனை, 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா உயிரோடு இல்லாததால் தண்டனையிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கமல்

இந்த தீர்ப்பை ஆதரித்து  திரையுலகினர் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அசாதாரண அரசியல் நிலை குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்துவரும் கமல், பழைய பாட்டுத்தான் இருந்தாலும்... என்று குறிப்பிட்டு, "தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடாகூடம்.. எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்.. " என்று குறிப்பிட்டுள்ளார்.

அரவிந்த்சாமி 
 
"தற்போதைய காபந்து முதல்வராகிய ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் அலுவலகத்துக்கு செல்வதை பார்க்க ஆவலாக உள்ளது. அவரை முன்மொழிந்து பின்பற்றி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்களது பணியை தொடங்க வேண்டும்" என அரவிந்த்சாமி தனது விருப்பத்தை கூறியிருக்கிறார்.

இசையமைப்பாளர் கங்கை அமரன்:

இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறுகையில், என்னைப் பொறுத்தவரையில் ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவன். சிறுக சிறுக நான் உழைத்து சம்பாதித்து வாங்கிய சொத்தை பறித்தார். இப்போது சரியான நேரத்தில் இறைவன் தண்டனை வழங்கியிருக்கிறான். இனி சசிகலாவின் முதல்வர் கனவு ஒரு போதும் நிறைவேறாது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே சசிகலாவின் ஆட்டம் கடுமையாக இருந்தது, அவரே முதல்வராகி இருந்தால் தமிழகம் என்ன நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்? கடவுள் காப்பாற்றிவிட்டான் என்றார்.

பிரகாஷ்ராஜ்
 
நடிகர் பிரகாஷ்ராஜ், "இது முடிவு இல்லை. தூய்மையின் தொடக்கமே. இன்னும் போக பல மைல்கள் உள்ளன" என்று கூறியுள்ளார்.

காயத்ரி ரகுராம்

நடன இயக்குனரும், இயக்குனருமான காயத்ரி ரகுராம் நச்சென்று, "கடவுள் இருக்கிறார்" என்று தனது கருத்தை கூறியுள்ளார்.
 
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பயமே இல்லை. "ஓ.பி.எஸ் என்றால் ஓ.பன்னீர் செல்வம் என்று நினைத்தாயா ஆப்ரேஷன் சசிகலா" என்று கூறியுள்ளார்.

சீனு ராமசாமி
 
"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்... மீண்டும் தர்மம் வெல்லும்... இன்று தர்மம் வென்றது.. கொடியவர்கள் தண்டிக்கபட்டார்கள்... நன்றி இறைவா..." என்று காமெடி நடிகர் பால சரவணனும், "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்று இயக்குனர் சீனு ராமசாமியும் கூறியுள்ளனர்.

சித்தார்த்:  நீதிக்கான கியாரன்டி தரப்பட்டுள்ளது. வரவேற்கிறேன்.

ராதிகா
 
தமிழகத்தில் கடந்த 7 நாள்களாக நிலவும் அசாதாரண சூழல் காரணமாக பெண்கள்கூட மெகா சீரியலைவிட்டு செய்தி சேனல்கள் பார்க்கிறார்கள். இது மெகா சீரியல் தயாரிப்பாளரான ராதிகாவை பாதித்துள்ளது. இந்த சூழலை, "மெகா சீரியல்களுக்கு இது மிகப்பெரிய போட்டி" என்று அவர் வர்ணித்துள்ளார்.

அருள்நிதி
 
திமுக தலைவரின் பேரன் அருள்நிதி, "3 பேர் உள்ளே.... 125 பேர் வெளியே.... பத்தரையுடன் முடிந்தது ஏழரை" என்று ஒரே போடாக போட்டுள்ளார்.
 
இன்னும் காத்திரமான சுவாரஸியமான கமெண்ட்கள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை பேசாமலிருந்த திரை பிரபலங்கள் பயமின்றி பேச இதுவொரு சந்தர்ப்பம். சினிமா நட்சத்திரங்கள் இந்த வாய்ப்பை முழு அளவில் பயன்படுத்த பொதுமக்கள் சார்பில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

குஷ்பு:

தீர்ப்பு வந்து விட்டது. கொண்டாட்டநேரம். மாநிலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. பயமுறுத்திக் கொண்டிருந்த இருண்ட காலம் முடிவுக்கு வந்திருக்கிறது. காதலர் தினத்தையொட்டி தமிழ் நாட்டு மக்களுக்கு சுப்ரீம் கோர்ட் சிறந்த பரிசு வழங்கி இருக்கிறது. இனி மக்கள் பயமின்றி நிம்மதியாக சுவாசிக்க முடியும்.

கவுதமி:

ஊழல் செய்ததற்காக சசிகலா குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். அதே போல் ஜெயலலிதாவின் மரணத்துக்கும் அவர் பதில் சொல்லி ஆக வேண்டும். இரு வழக்கும் ஒரே தண்டனைக்குரியது அல்ல.

ஸ்ரீபிரியா:

நாடகமே உலகம். நாமெல்லாம் நடிகர்கள். இயக்குபவன் இறைவன். முக்கியமாக தொகுப்பாளன். வேண்டாத காட்சிகளை தக்க சமயத்தில் வெட்டி எறிவான். நன்றி இறைவா.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads



Tirunelveli Business Directory