» சினிமா » செய்திகள்

சிவா மனசில புஷ்பா.. தமிழக அரசியல் அதிரடி படம்!!

வியாழன் 13, ஜூலை 2017 8:32:26 AM (IST)

சிவா மனசில புஷ்பா படம் தமிழக அரசியலை அதிர வைக்கும் என அப்படத்தின் இயக்குநர் வாராகி கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை குறி வைத்து, அரசியல் சர்ச்சைகளை கூறும் படமாக, சிவா மனசுல புஷ்பா வெளியாக உள்ளது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், விஷாலுக்கு எதிராக மல்லுக்கட்டியவர் வாராகி. 

இவர் தயாரித்து நடித்துள்ள, சிவா மனசுல புஷ்பா என்ற படம், உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. இதில், வாராகி, ஷிவானி, நதியாஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருந்தவராஜா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து, இப்படத்தை ஆகஸ்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

வாராகி கூறியதாவது: இரண்டு அரசியல் பிரபலங்களின், நிஜ வாழ்க்கையை மையப்படுத்தி, படத்தை எடுத்துள்ளோம். எதிரெதிர் துருவத்தில் உள்ள, ஒரு ஆண் மந்திரிக்கும், பெண் எம்.எல்.ஏ.,வுக்கும் இடையே உள்ள ரகசிய உறவை இப்படத்தில் காட்டியுள்ளோம். தமிழக அரசியலில், இப்படம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தும். படத்தின், எடிட்டிங் முடிந்து, "போஸ்ட் புரொடக் ஷன்ஸ்" வேலைகள் நடந்து வருகின்றன. ஆகஸ்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். படத்திற்கு, அரசியல் பிரபலங்களிடம் இடமிருந்து, மிரட்டல் வந்தது. படத்தை பார்த்து விட்டு கருத்து கூறுங்கள் என, தெரிவித்துள்ளேன்.


மக்கள் கருத்து

சாமிJul 17, 2017 - 05:01:34 PM | Posted IP 117.2*****

சூப்பர் தலைப்பு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory