» சினிமா » செய்திகள்

கமலுக்கு நடிகர் சங்கம் துணை நிற்கும்: விஷால் பேட்டி

புதன் 26, ஜூலை 2017 5:13:05 PM (IST)

கமலுக்கு ஒரு பிரச்னை என்றால், அவர் பின்னால் ஒட்டுமொத்த நடிகர் சங்கமும் உறுதுணையாக நிற்கும் என விஷால் கூறினார்

தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கான இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. இதனையடுத்து கட்டிடப் பணிகள் மீண்டும் தொடங்கும் என்று விஷால் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 

வருகிற 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நடிகர் சங்கக் கட்டடம் கட்டும் பணிகள் முடிக்கப்படும். முன்னர் கூறியது போலவே நடிகர் சங்கக் கட்டடப் பணிகள் நிறைவடைந்ததும் திருமணம் செய்து கொள்வேன். சிறப்பான திட்ட அமைப்புடன் உருவாகும் நடிகர் சங்கக் கட்டடம், நாடகம், விழாக்கள், விருது வழங்கும் நிகழ்வுகள் எனப் பல நிகழ்ச்சிகளும் நடைபெறும் வகையில் பெரிய அரங்கத்துடன் அமைக்கப்பட உள்ளது.

மொத்தம் நான்கு தளங்கள் கொண்ட சிறப்பானதொரு கட்டட அம்சத்துடன் நடிகர் சங்கம் அமையும். தற்போது கேளிக்கை வரி தொடர்பாக நடந்து வரும் பிரச்னையில் திரைப்படத்துறைக்குச் சரியான நீதி கிடைக்கும் என்றே நம்புகிறோம். சமீப காலத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக சில பிரச்னைகள் எழுந்த வண்ணம் உள்ளன. கமலுக்கு ஒரு பிரச்னை என்றால், அவர் மீது வழக்கு தொடரப்பட்டால், அவர் பின்னால் நான் நிற்பேன். ஒட்டுமொத்த நடிகர் சங்கமும் அவருக்கு உறுதுணையாக நிற்கும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory