» சினிமா » செய்திகள்

போதை மருந்து விவகாரம்: நடிகை முமைத்கானிடம் 6மணி நேரம் தீவிர விசாரணை

வெள்ளி 28, ஜூலை 2017 8:57:09 AM (IST)

போதை மருந்து விவகாரத்தில் நடிகை முமைத்கானிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 6 மணி நேரம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

தெலங்கானவில் மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் போதை மருந்து விற்பனை செய்ததாக கெல்வின் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் ரவிதேஜா, தருண், நவ்தீப், தனிஷ், நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்நாத் உட்பட 12 பேர் நேரில் ஆஜராக நோட்டீஸ் அளித்து உத்தரவிடப்பட்டது. இது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, இயக்குனர் பூரி ஜெகந்நாத், சின்னா, நவ்தீப், தருண் ஆகியோர் விசாரணைக்கு ஆஜரான நிலையில், பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடிகை சார்மி நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜரானார். இதில், சார்மியின் செல்போனில் இருந்து கெல்வினுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தகவல் அனுப்பியது உட்பட பல்வேறு கேள்விகளுடன் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், நடிகை முமைத்கான் ஐதரபாத்தில் உள்ள மது விலக்கு மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று காலை விசாரணைக்கு ஆஜரானார். தொடர்ந்து, அவரிடம் 6 மணி நேரம் பெண் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில், கெல்வினை சந்தித்தது எப்படி, யார் மூலமாக கெல்வினுடன் பழக்கம் ஏற்பட்டது, வெளிநாடுகளுக்கு செல்லும்போது கெல்வின் உடன் வருவாரா? என்பது உட்பட பல்வேறு கேள்விகளுடன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கு முமைத்கான் பதிலளித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இன்று பிரபல நடிகர் ரவிதேஜா விசாரணைக்கு ஆஜராகிறார். இதில், மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory