» சினிமா » செய்திகள்

பாகுபலி ஹீரோ பிரபாஸுக்கு வில்லனாக அருண் விஜய்?

சனி 29, ஜூலை 2017 5:27:44 PM (IST)பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் ‘சாஹு’ படத்தில், அருண் விஜய் நடிக்கவுள்ளார்.
 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியான படம் ‘பாகுபலி’. இந்தப்  படத்தின் பிரமாண்ட வெற்றியால், உலகம் முழுவதும் தெரிந்தவராகி விட்டார் பிரபாஸ். இவர் அடுத்ததாக நடிக்கும் படம்  ‘சாஹு’. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகும் இதில், அனுஷ்கா ஹீரோயினாக நடிப்பதாக கூறப்படுகிறது.
 
‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்த நீல் நிதின் முகேஷ், பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில், அருண்  விஜய்யும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அவர் வில்லனாக நடிக்கிறாரா அல்லது வேறேனும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை. தற்போது மகிழ் திருமேனி இயக்கிவரும் ‘தடம்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்  அருண் விஜய். விரைவில் அவர் ‘சாஹு’ ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறார் என்கிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory