» சினிமா » செய்திகள்

வேலைக்காரனின் முழுப்பக்க விளம்பரத்துக்கு அபராதம் விதித்தது தயாரிப்பாளர் சங்கம்

செவ்வாய் 15, ஆகஸ்ட் 2017 8:37:23 PM (IST)வேலைக்காரன் படத்துக்காக முழுப்பக்க விளம்பரம் கொடுத்தமைக்கு அபராதம் விதித்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

செப்டம்பர் வெளியீடு என்பதாலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி மாலை வேலைக்காரன் டீஸர் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. இதனை தெரிவிக்கும் வகையில் முன்னணி நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்தது வேலைக்காரன் படக்குழு.

இந்த விளம்பரங்களுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தும், பெரும் தொகையை அபராதமாக விதித்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். ஏனென்றால், தினசரிகளில் படத்தை விளம்பரப்படுத்துவதற்கு சில நிபந்தனைகளை முன்பே விதித்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம். அதில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கக்கூடாது என்பதும் அடங்கும். இதனை வேலைக்காரன் படக்குழுவினர் பின்பற்றவில்லை என்பது தான் அபராதத்திற்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வேலைக்காரன் டீஸருக்கு சமூகவலைத்தளங்களில் பெரும் ஆதரவு கிடைத்திருப்பதால், படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் வேலைக்காரன் படத்தில் ஃபகத் பாசில், நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனோடு நடித்திருக்கிறார்கள். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வருகிறது.

வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. விரைவில் 2-ம் கட்ட படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறது படக்குழு.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory