» சினிமா » செய்திகள்

வேலையில்லா பட்டதாரி 3 கண்டிப்பாக வரும் : தனுஷ்

புதன் 16, ஆகஸ்ட் 2017 8:35:38 PM (IST)வேலையில்லா பட்டதாரி 3 கண்டிப்பாக வரும் என்று வேலையில்லா பட்டதாரி 2 வெற்றி பெற்றதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ் தெரிவித்தார்.

வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. செளந்தர்யா ரஜினிகாந்த், தனுஷ், விவேக் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இப்பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ் பேசியதாவது : வேலையில்லா பட்டதாரி 2 கதையை முழுமையாக முடித்து செளந்தர்யாவிடம் கொடுக்கும் போதே, இப்படத்தின் வெற்றி முதல் பாகம் அளவுக்கு அல்ல,ஆனால் நன்றாக இருக்கும் என்று முதல் நாளிலேயே கூறித்தான் பணிகளைத் தொடங்கினோம். முதல் பாகத்தோடு தான் அனைத்து விஷயங்களையும் ஒப்பிடுவார்கள் என்பது தெரியும். ரீமேக் படங்கள் செய்யும் போதும், ஒரிஜினல் படத்தில் நடித்தவர்களின் நடிப்புதான் சிறப்பாக இருந்ததாக கருதுவார்கள்.இது இயல்புதான்.

இப்படத்துக்கு என ஒரு வெற்றியை வைத்திருந்தோம். ஆனால், அதைத் தாண்டி படம் வெற்றிடையந்ததில் சந்தோஷம். நல்ல விஷயங்கள் சொல்கிறோம், இப்படத்தின் மூலம் நேர்மறையான விஷயங்களை எடுத்துரைக்கிறோம் என நினைத்தேன். ஒரு சிலர் திறக்குறளுக்கு அர்த்தம் சொல்லியிருக்கலாமே என்றார்கள். அப்படி சொல்லியிருந்தால் யாருமே அதற்கான அர்த்தம் என்னவென்று பார்த்திருக்க மாட்டார்கள். வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களுமே திருக்குறளில் இருக்கிறது என மக்களுக்கு தெரிந்து, படித்துப் பார்க்க வேண்டும். எனது நண்பர்கள் பலர் இப்போது திறக்குறள் புத்தகம் வாங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவே இப்படத்தின் வெற்றியாக கருதுகிறேன்.

எனது திரையுலக வாழ்வில் முதன்மையான 3 வெற்றிப் படங்களில் இப்படமும் இருக்கப் போகிறது. அதற்கு முக்கியமான காரணம் நேர்மறையான விஷயங்களைச் சொன்னது மட்டுமே. அன்பைப் பரப்பியதால் மட்டுமே மக்கள் குடும்பமாக வந்து படத்தைப் பார்க்கிறார்கள்.

இப்படத்தின் கதையைத் தாண்டி, முதுகெலும்பு என்றால் தாணு சார் வைத்திருந்த நம்பிக்கை மட்டுமே. ஒரு நடிகராக எனக்கொரு மார்க்கெட் இருக்கிறது. அதைத் தாண்டி கதையின் மீது நம்பிக்கை வைத்து செலவு செய்தார் தாணு சார். இந்தளவுக்கு பிரம்மாண்டமான வெற்றி என்பது தாணு சார் இல்லாமல் நடந்திருக்குமா என்று தெரியவில்லை.

எப்போதும் அன்பு மட்டுமே இந்த உலகத்திற்கு தர வேண்டும். அது மட்டுமே நிரந்தரம். ஒருவரைப் பிடித்திருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், பிடிக்கவில்லை என்றால் எதுவுமே பேசாமல் இருக்கலாம். பிடிக்கவில்லை என்பதற்காக வெறுப்பை விரும்ப வேண்டிய அவசியமில்லை. நிச்சயமாக அன்பு செலுத்துங்கள், அது மட்டுமே இந்த உலகிற்கு அதிகம் தேவை. உலகம் நிறைய எதிர்மறையான விஷயங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பெரிய பிரச்சினைகளைத் தாண்டி மற்றவர்களிடம் அன்பைச் செலுத்தினாலே, இயற்கை நம்மீது அன்பு செலுத்தும்.

வேலையில்லா பட்டதாரி 3 கண்டிப்பாக வெளிவரும். எப்போது என்பது சரியாக தெரியவில்லை. இரண்டாம் பாகத்துக்கு இருந்த பிரச்சினை, 3-ம் பாகத்துக்கு இருக்காது. அப்படத்தையும் நான் எழுதி முடித்தவுடன் தான் மற்ற விஷயங்கள் முடிவு செய்யப்படும். இவ்வாறு தனுஷ் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory