» சினிமா » செய்திகள்

பிரபல காமெடி நடிகர் அல்வா வாசு காலமானார்

வெள்ளி 18, ஆகஸ்ட் 2017 10:27:36 AM (IST)

தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகர் அல்வா வாசுவின் உடல்நிலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 57.

அமைதிப்படை படத்தில் சத்யராஜுக்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் கேரக்டரில் நடித்து, அதன்மூலம் அல்வா வாசு எனப் பிரபலமானவர் நடிகர் வாசு. இவர், வடிவேலுடன் சேர்ந்து பல படங்களில் காமெடி செய்தவர். கதை எழுதும் திறமையும் வாசுவிடம் இருந்ததால் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். மணிவண்ணனிடம் பணியாற்றிய சுந்தர்.சி. போன்றோர் பெரிய இயக்குனர்கள் ஆகிவிட, இவர் தொழிலில் கவனம் செலுத்தாமல் இயக்குனருக்கு செல்லப் பிள்ளையாக மட்டுமே இருந்தார். 

மணிவண்ணன் இயக்கிய படங்களுக்கு காமெடி ஸ்க்ரிப்ட் எழுதினார். தனியே கதைகள் எழுதியும் தயாரிப்பாளர்களிடம் முயற்சித்துப் பார்த்தார். ஆனாலும், ஏமாற்றமே மிஞ்சியது. பொருளாதாரச் சூழலால் சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். காமெடியனாக நடித்ததன் மூலம் வடிவேலுடன் அறிமுகம் கிடைத்தது. வடிவேலு உருவாக்கிய காமெடி டீமில் அல்வா வாசு சேர்ந்தார். ஐந்து வருடங்களுக்கும் மேல் தொடர்ச்சியாக நடித்துப் பட்டையைக் கிளப்பினார் வாசு. இப்படி, 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாப்பாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். நகைச்சுவை நடிகர் வடிவேலுடன் இவர் நடித்த காட்சிகள் மிகவும் பிரபலமானவை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory