» சினிமா » செய்திகள்

மீசைய முறுக்கு ஆத்மிகா நரகாசூரன் படத்தில் நடிக்க ஒப்பந்தம்

புதன் 30, ஆகஸ்ட் 2017 8:15:24 PM (IST)


கார்த்திக் நரேன் இயக்கவுள்ள நரகாசூரன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

துருவங்கள் பதினாறு இயக்கவுள்ள நரகாசூரன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்துக்கு ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீசைய முறுக்கு படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நரகாசூரன் படத்தின் படப்பிடிப்புக்காக இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் கார்த்திக் நரேன். மேலும், துருவங்கள் 16 போலவே இப்படத்தையும் பாடல்களே இன்றி உருவாக்க முடிவு செய்துள்ளார். செப்டம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படத்தை உருவாக்கவுள்ளார்கள். கெளதம் மேனன் மற்றும் கார்த்திக் நரேன் இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு துருவங்கள் பதினாறு குழுவே பணிபுரியவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory