» சினிமா » செய்திகள்

விவேகம் விமர்சன சர்ச்சை : பாடகர் ஸ்ரீனிவாஸ் பதிவை நீக்கியதற்கான காரணம்?

வியாழன் 31, ஆகஸ்ட் 2017 7:11:00 PM (IST)

விவேகம் விமர்சன சர்ச்சை குறித்த பாடகர் ஸ்ரீனிவாஸின் தனது ஃபேஸ்புக் பதிவை நீக்கியதற்கான காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விவேகம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியானது. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. இதில் மாறன் என்பவரது விமர்சனம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

மாறனின் விமர்சனத்துக்கு திரையுலகினர் பலரும் சமூகவலைத்தளத்தில் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த சர்ச்சைக் குறித்து பாடகர் ஸ்ரீனிவாஸ், மாறன் விமர்சனத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்து பதிவொன்றை வெளியிட்டார். ஸ்ரீனிவாஸின் ஃபேஸ்புக் பதிவு அஜித் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. மேலும், இதர நடிகர்களின் ரசிகர்கள் அவரது பதிவை பகிர்ந்தும், ஆதரவும் தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில், விவேகம் விமர்சனம் குறித்த தனது பதிவை நீக்கியுள்ளார் பாடகர் ஸ்ரீனிவாஸ். இது குறித்து விசாரித்த போது, விமர்சனம் செய்வது அனைவருக்குமே உரிமையுண்டு என்பதால் அக்கருத்தைத் தெரிவித்திருந்தார். ஆடியோ வடிவில் அஜித்தை கடுமையாக சாடியிருந்தது ஸ்ரீனிவாஸிற்கு தெரியாது.

அஜித் குறித்த மாறனின் ஆடியோ பேச்சை பலரும் ஸ்ரீனிவாஸிற்கு அனுப்பி வைத்தார்கள். அதைக் கேட்டவர் விமர்சகரின் பேச்சு மிகவும் தவறானது என்பதை அறிந்து தனது பதிவை நீக்கியுள்ளார். தொடர்ச்சியாக அவருடைய பதிவு இருந்தால், பலரும் தவறாக புரிந்து கொள்வார்கள் என்பதே காரணம். படத்தை மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும், தனி மனித தாக்குதல் என்பது தவறு தான் என்று தெரிவித்தார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory