» சினிமா » செய்திகள்

விஜய் அற்புதமான மந்திரவாதி : மேஜிக் நிபுணர் புகழாரம்

வியாழன் 31, ஆகஸ்ட் 2017 8:04:57 PM (IST)


விஜய் அற்புதமான நடிகர் மட்டுமல்ல அட்டகாசமான மந்திரவாதியும் கூட என்பதை உறுதியாகக் கூறுகிறேன் என்று மேஜிக் நிபுணர் தெரிவித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் மெர்சல் படத்தில் கிராமத்து இளைஞர், மேஜிக் நிபுணர் மற்றும் மருத்துவர் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் விஜய். இதில் மேஜிக் நிபுணர் கதாபாத்திரத்துக்காக மேஜிக் நிபுணர்களிடம் பயிற்சி எடுத்திருக்கிறார் விஜய்.

விஜய்க்கு மேஜிக் கலைகளை கற்றுக் கொடுத்தவர்களில் ஒருவர் கோகோ ரெக்கியூம் (Gogo Requiem). ட்விட்டர் தளத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதிலிருந்தே, விஜய் ரசிகர்கள் அவரைப் பற்றி தெரிவிக்குமாறு தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் கோகோ ரெக்கியூம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது : இந்த மிகப்பெரிய கவுரவத்துக்கு நன்றி. கடந்த 24 மணி நேரத்தில், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என எனக்கு கிடைத்த அன்பின் அளவை நம்பமுடியவில்லை. மிக்க நன்றி. ஆனால் நான் இதற்கு தகுதியானவன் அல்ல. நான் ஒரு சாதரணமானவன். மே மாதம் படப்பிடிப்பு மசிடோனியாவில் நடக்கும்போது ஜோசஃப் விஜய்யுடன் பணியாற்றும் நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

படத்தைப் பற்றி என்னால் இப்போது அதிகம் பேச முடியாது. இன்னும் சில மாதங்களில் படத்தை மொத்தமாகப் பார்ப்பீர்கள். விஜய் அற்புதமான நடிகர் மட்டுமல்ல அட்டகாசமான மந்திரவாதியும் கூட என்பதை உறுதியாகக் கூறுகிறேன். நான் மட்டுமல்ல, டானி பென்னெட், ராமன் ஷர்மா என இன்னும் இருவர் உடன் இருந்தனர். அவர்களோடு இந்தியாவிலிருந்து 70-80 நபர்கள் படத்தின் உருவாக்கத்தில் பங்காற்றியிருக்கின்றனர். இவ்வாறு கோகோ ரெக்கியூம் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory