» சினிமா » செய்திகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் நடிகை தமன்னா .... வைரலாகும் படம்!!

வெள்ளி 1, செப்டம்பர் 2017 12:12:56 PM (IST)



நடிகை தமன்னாவும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கும் இணைந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை தமன்னா2005-ல் கேடி படம் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து கல்லூரி படத்தின் மூலம் பிரபலம் ஆனார். தொடர்ந்து  அயன், ஆனந்த தாண்டவம், பையா, சுறா, சிறுத்தை, வேங்கை, பாகுபலி 2  உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து முன்னனி நடிகையாக உள்ளார்.

இந்தநிலையில், நடிகை தமன்னா கடந்த 2013-ம் ஆண்டு துபாயில் நகைகடை ஒன்றிற்கு திறப்பு விழாவிற்கு சென்று இருந்தார். அவருடன் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கும் உடன் இருந்தார். அப்போது இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது இந்த புகைப்படம் மீண்டும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  அப்துல் ரசாக்கை தமன்னா திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு முன்னதாக ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியரை  திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டதாக கூறப்பட்டது. 

இந்தநிலையில் இது பொய்யான தகவல் எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் முதலில் அவரை இந்த உலகிற்கு முதலில் அறிமுகப்படுத்துவேன் என நடிகை தமன்னா அறிக்கையில் கூறியுள்ளார். தமன்னா, விக்ரமின் ஸ்கெட்ச், விஷ்ணு விஷாலின் பொண் ஒன்று கண்டேன், காமோஷி, ஜெய் லவ குஷா, குணால் கோலி இயக்கத்தில் தெலுங்கு படத்திலும், ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads



Tirunelveli Business Directory