» சினிமா » செய்திகள்

மெர்சலை தமிழகத்தில் சொந்தமாக வெளியிட தேனாண்டாள் பிலிம்ஸ் முடிவு

வெள்ளி 1, செப்டம்பர் 2017 7:28:33 PM (IST)


விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மெர்சல் படத்தை, தமிழகத்தில் சொந்தமாக வெளியிட தேனாண்டாள் பிலிம்ஸ் முடிவு செய்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மெர்சல் திரைப்படம், தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இதன் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனம் போட்டியிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.

ஆனால், மெர்சல் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் தாங்களே நேரடியாக விநியோகம் செய்யவுள்ளோம். யாரிடமும் விநியோக உரிமையைக் கொடுப்பதாக இல்லை என்று தெரிவித்துள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் தமிழகத்தின் பல்வேறு முன்னணி திரைப்படங்களை விநியோகித்து வெற்றி கண்டுள்ளது.

மேலும், மெர்சல் டீஸர் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை விரைவில் வெளியிடப்படும் என்று அந்நிறுவனத்தின் ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள மெர்சல் படத்தில் விஜய், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, வடிவேலு, சத்யராஜ், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தங்களுடைய தயாரிப்பில் 100-வது படமாக பெரும் பொருட்செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory