» சினிமா » செய்திகள்

ரஜினியின் 2.0 பாடல், டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

வியாழன் 7, செப்டம்பர் 2017 3:23:01 PM (IST)

ரஜினியின் ‘2.0’ பட பாடல் அடுத்த மாதம் துபாயில் வெளியிடப்படுகிறது; டிசம்பரில் டிரைலர் வெளியீடப்படுகிறது.

‘எந்திரன்’ படத்தின் 2-வது பாகம் ‘2.0’ மிகுந்த பொருட் செலவில் லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தி நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக நடித்திருக்கும் இதில், எமிஜாக்சன் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது. நவீன தொழில் நுட்பத்துடன் உருவாகி வரும் இதன் கிராபிக்ஸ் மற்றும் நவீன தொழில் நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கிறார்.

‘2.0’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அடுத்த மாதம் (அக்டோபர்) துபாயில் நடைபெறுகிறது. பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் ரஜினி, அக்ஷய்குமார், எமிஜாக்சன், ஷங்கர் மற்றும் பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். இதையடுத்து, ‘2.0’ படத்தின் டீசர் நவம்பரில் வெளியிடப்படுகிறது. இதற்கான விழா ஐதராபாத்தில் நடைபெறுகிறது. டிசம்பர் மாதம் சென்னையில் ‘2.0’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதை மிகவும் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த தகவலை லைகா பட நிறுவன நிர்வாக அதிகாரி ராஜு மகாலிங்கம் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory