» சினிமா » செய்திகள்

பழம்பெரும் நடிகர் ஆர்.என். சுதர்சன் காலமானார்!

வெள்ளி 8, செப்டம்பர் 2017 5:49:52 PM (IST)

பாயும்புலி, வேலைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகர் ஆர்.என். சுதர்சன் பெங்களூரில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருகு வயது 78.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த  சுதர்சன், 1939-ம் ஆண்டு பிறந்தார். தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சுதர்சனின் தந்தை நாகேந்திர ராவ், கன்னடத் திரையுலகின் பிரபல இயக்குநர். சுதர்சனின் சகோதரர்களும் திரைத்துறையில் பணியாற்றியவர்கள். 2008-ல் மறைந்த ஜெயகோபால் கன்னடத் திரையுலகில் பாடலாசியராகவும் 2012-ல் மறைந்த மற்றொரு சகோதரர் பிரசாத் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராகவும் இருந்துள்ளார்கள்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 250 படங்களில் நடித்துள்ள சுதர்சன், 21 வயதில் 1961-ல் தந்தையின் இயக்கத்தில் கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். 50க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு சைலாஸ்ரீ என்கிற மனைவி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory