» சினிமா » செய்திகள்

நீட் பிரச்சினை குறித்து முருகதாஸ் படம் இயக்குவார்: விஷால் நம்பிக்கை

செவ்வாய் 12, செப்டம்பர் 2017 11:50:13 AM (IST)

நீட் பிரச்சினை குறித்து ஏ.ஆர்.முருகதாஸ்  படம் இயக்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாக விஷால் தெரிவித்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஸ்பைடர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் மற்றும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கலந்து கொண்டார். இவ்விழாவில் அவர் பேசியதாவது: இவ்விழாவில் மகேஷ்பாபுவை தமிழ் சினிமாவுக்கு வரவேற்பதற்காக மட்டுமே கலந்து கொண்டுள்ளேன். 

தமிழ் மக்கள் நிச்சயம் அவரை ஏற்றுக் கொள்வார்கள். இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ஸ்பைடர் உருவாகியுள்ளது. இப்படம் வெளியாகும் சமயத்தில் ஆந்திராவே திருவிழா கோலத்தில் இருக்கும்.சென்னையில் கல்லூரி நாட்களில் மகேஷ்பாபுவை பார்த்திருக்கிறேன். கொஞ்சம் குண்டாக இருப்பார். ஆனால், தற்போது உடல் இளைத்து முழுமையாக மாறிவிட்டார்.

இந்தியாவில் உள்ள முக்கியமான சமூக பிரச்சினைகளை தன்னுடைய படங்களில் கூறுபவர் ஏ.ஆர்.முருகதாஸ். அவர் ஒரு சிறந்த இயக்குநர். அவர் இன்னும் நிறைய தமிழ்ப் படங்கள் இயக்க வேண்டும். இந்தி திரையுலகிற்கு செல்ல வேண்டாம். நீங்கள் எங்களுக்குத் தேவை. நீட் பிரச்சினை மற்றும் தமிழக அரசியல் சூழல் ஆகியவற்றை படமாக உருவாக்குவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இவ்வாறு விஷால் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory