» சினிமா » செய்திகள்

திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி.. வைரலாகும் ஸ்டில்..!!

புதன் 13, செப்டம்பர் 2017 4:59:40 PM (IST)

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படம் சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

"ஆரண்ய காண்டம்" படத்தைத் தொடர்ந்து, நீண்ட நாட்கள் கழித்து தனது அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கினார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வந்த இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் பி.எஸ்.வினோத். "அநீதி கதைகள்" என இப்படத்துக்கு பெயரிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது "சூப்பர் டீலக்ஸ்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. மேலும், சமந்தா தனது கதாபாத்திரத்தின் லுக்கை, ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் "ஷில்பா" என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தற்போது அக்கதாபாத்திரத்தின் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதற்கு சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory