» சினிமா » செய்திகள்

நடிகர் விஷால் எங்களுக்கு கட்டளையிடுவது சரியில்லை : அபிராமி ராமநாதன் பேட்டி

சனி 14, அக்டோபர் 2017 1:40:01 PM (IST)

நடிகர் விஷால் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளது சரியில்லை என பிரபல திரையரங்கம் உரிமையாளர் அபிராமி ராமநாதன் கூறினார்.

சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி 30 சதவீதம் என தமிழக அரசு நிர்ணயித்தது. ஏற்கனவே பல பிரச்சனைகள் இருக்க 30 சதவித வரி என்பது சரியாக இருக்காது என்று கூறி கடந்த வெள்ளி முதல் திரைப்படங்கள் வெளியாகாது என்று அறிவித்தனர். அதைத்தொடர்ந்து தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரியை 10 சதவீதமாக குறைத்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.மேலும் திரையரங்குகளுக்கான டிக்கெட் கட்ட ணத்தை உயர்த்திக் கொள்ளவும் அனுமதியளித்தது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அபிராமி ராமநாதன் கூறும் போது,திரையரங்க டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கும், கேளிக்கை வரி குறைப்புக்கும் தமிழக அரசுக்கு நன்றி என்றார். திரையரங்குகளில் தண்ணீர்பாட்டில் கொண்டு வரலாம் உள்ளிட்ட பல அறிவிப்புகளை விஷால் வெளியிட்டது குறித்து திரையரங்க உரிமையாளர்களுடன் விஷால் கலந்தாலோசிக்க வேண்டும்.  இணையதளத்தில் முன்பதிவு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.நடிகர் விஷால் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளது சரியில்லை என்றும் அபிராமி ராமநாதன் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory