» சினிமா » செய்திகள்

இந்தியன் 2 படத்திலிருந்து கமல் விலகல்? படக்குழு மறுப்பு

திங்கள் 16, அக்டோபர் 2017 10:23:41 AM (IST)ஷங்கர் இயக்க உள்ள "இந்தியன் 2’ படத்திலிருந்து கமல் விலகிவிட்டதாக வெளியான தகவலுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

"பிக் பாஸ்" நிகழ்ச்சி முடிவு பெற்றதைத் தொடர்ந்து, "விஸ்வரூபம் 2" படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கமல். அதனைத் தொடர்ந்து "சபாஷ் நாயுடு" படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் தில்ராஜு தயாரிக்கவுள்ள "இந்தியன் 2" படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் கமல். இது குறித்த அறிவிப்பு "பிக் பாஸ்" நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் முறையாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், "இந்தியன் 2" படத்திலிருந்து கமல் விலகிவிட்டதாகவும், சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமூகவலைத்தளத்தில் தகவல் வெளியானது. இச்செய்தி குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டது. இது குறித்து விசாரித்த போது, "இந்தியன் 2"வில் கமல் நடிக்கவிருப்பது உறுதி. "2.0" படத்தின் பாடல் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ஷங்கர். அதனைத் தொடர்ந்து இசை வெளியீடு உள்ளிட்ட விளம்பரப்படுத்தும் பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் "இந்தியன் 2"வில் கவனம் செலுத்தவுள்ளார். மேலும், சூர்யா நடிப்பதாக வெளியான தகவல்கள் தவறானவை" என்று தெரிவித்தார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory