» சினிமா » செய்திகள்

விஜய்யின் மெர்சல் படத்துக்கு யூ/ஏ சான்றிதழ்

செவ்வாய் 17, அக்டோபர் 2017 10:56:15 AM (IST)

நடிகர் விஜய்யின் மெர்சல் படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் இணைந்து நடித்து ரூ.140 கோடி செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள படம் மெர்சல். அட்லி இயக்கி உள்ளார். இந்த படம் தீபாவளிக்கு உலகம் முழுவதும் 1500-க்கும் மேலான திரையரங்குகளில் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மெர்சல் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் படத்தில் புறாவை பயன்படுத்திய சர்ச்சை காட்சி இருப்பதாகவும் அதற்கு அனுமதி பெறவில்லை என்றும் விலங்குகள் நல அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. விலங்குகள் நல வாரியத்தின் சான்றிதழ் இல்லாததால் தணிக்கை குழு அனுமதி வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

விலங்குகள் நல வாரியத்தின் எதிர்ப்பில் சிக்கியதால் படம் தீபாவளிக்கு வெளியாகுமா? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. மெர்சல் படத்தில் புறா பறப்பது போன்ற காட்சி உள்ளது. புறா காட்சி கிராபிக்ஸ் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். ஆனால் அதற்கான ஆதாரங்கள் விலங்குகள் நல வாரியத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று கூறப்பட்டது.

படத்தில் இடம்பெறும் பாம்பு ராஜநாகம் என்பதற்கு பதிலாக நாகபாம்பு என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இந்த காரணங்களால் விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று அளிக்க தாமதம் செய்தது. படக்குழுவினர் தேவையான ஆதாரங்களை உடனடியாக விலங்குகள் நல வாரியத்தில் சமர்ப்பித்தனர். இதைத்தொடர்ந்து விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அவசர கூட்டம் நேற்று நடந்தது. அப்போது டெல்லியில் இருந்து வந்த சிறப்பு குழுவினர் சர்ச்சை காட்சிகளை பார்த்தனர். பின்னர் மெர்சல் படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியதையடுத்து மத்திய தணிக்கை வாரியமும் சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் 2 காட்சிகள் நீக்கப்பட்டு யூ/ஏ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியிருக்கிறது. தணிக்கை சான்றிதழும் கிடைத்துவிட்டதால் நாளை திட்டமிட்டபடி மெர்சல் படம் வெளியாகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory