» சினிமா » செய்திகள்

கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ஓவியா பேட்டி

வெள்ளி 20, அக்டோபர் 2017 4:07:18 PM (IST)

மக்களுக்கு நன்மை செய்ய கமலுக்கு போதுமான வாய்ப்பு கொடுங்கள் என நடிகை ஓவியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஓவியா, அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை, ஆனால் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன். சரியான நேரத்தில்தான் அவர்கள் வருகிறார் என தனிப்பட்ட முறையில் எனக்கு தெரிகிறது. அவர் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கின்றேன். நடிகர்களுக்கு பணி ஓய்வு என்பது கிடையாது, அது மக்கள் கையில்தான் உள்ளது. 

தனக்கு வரும் வாய்ப்புகளை வேண்டாம் என ஒதுக்கி வரும் அவர்களை நாம் பாராட்டத்தானே வேண்டும். மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும், ஒரு உயரத்திற்கு அவர்கள்தான் கொண்டு செல்ல வேண்டும். நான் அரசியலுக்கு வரும் என நினைத்தால் முடியாது, மக்கள் அவர்கள் தரப்பிலிருந்து வாக்களிக்க வேண்டும்.  எனவே மக்கள் வாக்களித்து தேர்வு செய்தால் அது நல்ல விஷயம்தானே. சினிமாவில் இருக்கும் போது சமூகத்திற்கு பெரிய அளவில் செய்ய முடியாமல் போகலாம், ஆனால் அரசியல் என்று வரும்போது அவர் சிறப்பாக செயல்படுவார். 

அரசியலை மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு தளமாகக் கருதுகிறேன். அவர் செய்வார் என நான் விரும்புகின்றேன். மக்களுக்காக நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்றார். கமல் மீதான விமர்சனம் தொடர்பான கேள்விகளுக்கு, எலலா விவகாரத்திற்கும் சரியான நேரம் என ஒன்று உள்ளது, முதலில் நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும், பின்னர் தான் பிறருக்கு மகிழ்ச்சியுடன் செய்ய முடியும். சரியான நேரம் என தெரிந்தால்தான் முடிவு எடுக்க முடியும் அவருக்கு இந்த நேரம் சரியானதாக பட்டிருக்கலாம், அதனால் அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் எல்லாம் மக்கள் கையில்தான் உள்ளது என்றார். 

ரசிகர்களின் அன்பு குறித்தான கேள்விகளுக்கு எப்போதும்போல் சிரித்துக்கொண்டு இது அனைத்தும் அவர்களுடைய அன்பாகும் என்றார் ஓவியா. அரசியல் எண்ணம் எதுவும் கிடையாது. படவாய்ப்பு குறித்தான கேள்விக்கு பதிலளிக்கையில் எனக்கு பிடித்தவர்களை எப்போதும் தவறாக பயன்படுத்தவே மாட்டேன் என்றார். அரசியல் பற்றி எதுவும் தெரியாது, எந்தஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு கொடுக்கிறேன் என்றெல்லாம் நான் செல்லவே இல்லை எனவும் கூறிவிட்டார்.  ஓவியா ஆர்மி, ஓவியா ஃபேமிலியாக மாறி விட்டது எனவும் குறிப்பிட்டார் ஓவியா. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory