» சினிமா » செய்திகள்

பிரபல திரைப்பட இயக்குனர் ஐவி சசி காலமானார்!!

செவ்வாய் 24, அக்டோபர் 2017 3:26:30 PM (IST)

பிரபல திரைப்பட இயக்குனர் ஐவி சசி சென்னையில் இன்று  காலமானார்.

பிரபல மலையாள இயக்குனர் ஐவி சசி. மலையாளத்தில் பல படங்களை இயக்கியுள்ள சசி தமிழில் அலாவுதீனும் அற்புத விளக்கும், காளி, ஒரே வானம் ஒரே பூமி, குரு, எல்லாம் உன் கைராசி உள்ளிட்ட தமிழ் படங்களையும் இயக்கியுள்ளார். நடிகை சீமாவை திருமணம் செய்த சசி குடும்பத்துடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். 

இந்நிலையில் அவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிர் இழந்தார். வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 69. அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சசியின் மறைவு செய்தி அறிந்த திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ஐ.வி சசி 1968 முதன் முதலில் கலியல்ல கல்யாணம் என்ற படத்தின் மூலம் இயக்குனரானார்.  அவளோடே ராவுகள் மூலம்  பிரபலமானார்  1970 முதல் 1990 வரை பல வெற்றிபடங்களை தந்தவர்.அனுபவம், ஆள் கூட்டத்தில் தனியே,1921, மிருகய்யா,  பலராம் விஷ் தாராதாஸ்,  ஆதியொழுக்குகள், தேவசுரம், இன்யெங்கிலும் வெற்றிபடங்களில் சில. நடிகர் மம்முட்டியை தனது திரிஷ்னா படத்தின் மூலம் ஐ.வி சசி அறிமுகப்படுத்தினார்.  

தேசிய ஒருங்கிணப்புக்காக  இவரது ஆரூடம் படத்திற்கு  1982 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றார்.  சிறந்த இயக்குனருக்கான மாநில விருத்து இரண்டுமுறை பெற்று உள்ளார்.2015 ஆம் ஆண்டு ஜே. சி. டேனியல் விருது பெற்றார்.2013 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்று உள்ளார். சினிமா நடிகை சீமா இவரது மனைவி. அனு மற்றும் அனி என 2  குழந்தைகள்  உள்ளனர்.அவரது உண்ஐஅயான பெயர் இருப்பம் வீடு சசிதரன் கோழிக்கோட்டில் 1948 ஆம் ஆண்டில் பிறந்தார்.  சினிமா உலகில் ஆர்ட் டைரக்டராக நுழைந்தார்.  சென்னை கலைக்கல்லூரில் டிப்ளமோ படித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory