» சினிமா » செய்திகள்

ஹெச். ராஜாவை கலாய்த்த உதயநிதி பட இயக்குனர்!!

செவ்வாய் 7, நவம்பர் 2017 11:29:57 AM (IST)

பப்ளிசிட்டிக்கு நன்றி சார் என்று இப்படை வெல்லும் படத்தின் இயக்குனர் ஹெச். ராஜாவிடம் தெரிவித்துள்ளார்.
 
மெர்சல் படத்திற்கு தயாரிப்பாளர்களுக்கு ஒரு பைசா செலவு வைக்காமல் பாஜக இலவச விளம்பரம் கொடுத்தது. பாஜக செய்த பிரச்சனையால் மெர்சலுக்கு தேசிய அளவில் சூப்பராக விளம்பரம் கிடைத்தது. தேசிய ஊடகங்கள் மெர்சல் பற்றி செய்தி வெளியிட்டு பப்ளிசிட்டி கொடுத்தன.

மெர்சலை போன்றே தனது இப்படை வெல்லும் படத்திற்கும் ஹெச். ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் விளம்பரம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். உதயநிதி கலாய்த்ததை பார்த்த பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம் என்று ட்வீட்டினார்.



ராஜாவின் ட்வீட்டை பார்த்த இப்படை வெல்லும் படத்தின் இயக்குனர் கவுரவ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ராஜா சார் பப்ளிசிட்டிக்கு நன்றி சார். எங்களின் குழு உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கு. கலக்குங்க சார், கைவிட்டுடாதீங்க என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads



Tirunelveli Business Directory