» சினிமா » செய்திகள்
இப்படை நிச்சயம் வெல்லும்: உதயநிதிக்கு ஸ்டாலின் வாழ்த்து
புதன் 8, நவம்பர் 2017 11:22:37 AM (IST)

உதயநிதி நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படை வெல்லும் படத்தை பார்த்த மு.க.ஸ்டாலின், இப்படை நிச்சயம் வெல்லும் என்று பாராட்டி இருக்கிறார்.
ஸ்டாலின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் இப்படை வெல்லும். இதில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். கவுரவ் நாராயணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படம் வரும் நவம்பர் 9ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை ஸ்டாலின் பார்த்து படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
உதயநிதி நடித்த படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே தவறாமல் பார்த்து வருகிறார் ஸ்டாலின். அதுபோல், இப்படை வெல்லும் படத்தையும் தன் குடும்பத்தாருடன் பார்த்திருக்கிறார். படம் பார்க்க வந்த அவரை தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம், இயக்குனர் கவுரவ் நாராயணன், நடிகர் சூரி உள்ளிட்டோர் வரவேற்றனர். படத்தைப் பார்த்த மு.க.ஸ்டாலின், இப்படை நிச்சயம் வெல்லும் எனப் பாராட்டியுள்ளார். படத்தைப் பார்த்து ரசித்துப் பாராட்டிய ஸ்டாலினுக்கு, தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம் மற்றும் இயக்குனர் கவுரவ் நாராயணன் நன்றி தெரிவித்தார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. மெர்க்குரி!
வியாழன் 19, ஏப்ரல் 2018 11:52:43 AM (IST)

மணப்பெண்ணை தேர்வு செய்ய நடிகர் ஆர்யா மறுப்பு
புதன் 18, ஏப்ரல் 2018 10:59:07 AM (IST)

தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை: நடிகைகள் கதறல்!!
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 5:04:14 PM (IST)

வடிவேலுக்கு தடை? தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 3:39:05 PM (IST)

கோச்சடையான் பட விவகாரத்தில் ரூ. 6.2 கோடியை செலுத்த லதா ரஜினிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 10:40:20 AM (IST)

திருட்டு விசிடியில் படம் பார்க்காதீர்கள்: பிரபுதேவா வேண்டுகோள்
திங்கள் 16, ஏப்ரல் 2018 5:50:55 PM (IST)
