» சினிமா » செய்திகள்

நரகாசூரன் பட டீசர் : நவ 25 ம் தேதி வெளியீடு

செவ்வாய் 21, நவம்பர் 2017 8:35:06 PM (IST)

துருவங்கள் பதினாறு பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் நரகாசூரன் படத்தின் டீசர் நவம்பர் 25ல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான கதையமைப்பில் வெளி வந்த படம் துருவங்கள் பதினாறு. இப்படத்தை அடுத்து  இவர் இப்போது இயக்கி வரும் படம் நரகாசூரன். இதில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர், நவம்பர் 25இல் வெளியிடப்படும் என இயக்குநர் கார்த்திக் நரேன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும், படம் அடுத்த ஆண்டு கோடைக் காலத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory