» சினிமா » செய்திகள்

சிறந்த இந்தியப் படமாகத் விக்ரம் வேதா தேர்வு:பாகுபலி 2 படத்தைப் பின்னுக்குத் தள்ளியது!

வெள்ளி 22, டிசம்பர் 2017 3:50:58 PM (IST)

2017-ல் வெளிவந்த படங்களில் சிறந்த இந்தியப் படங்களின் பட்டியலை புகழ்பெற்ற திரைப்பட இணையத்தளமான ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பாகுபலி 2 படத்தைப் பின்னுக்குத் தள்ளி விஜய் சேதுபதி, மாதவன் நடித்துள்ள விக்ரம் வேதா முதலிடம் பிடித்துள்ளது.

விக்ரம் வேதாவுக்குப் பின்னால் 2-ம் மற்றும் 3-ம் இடங்களை பாகுபலி 2 மற்றும் அர்ஜூன் ரெட்டி படங்கள் பிடித்துள்ளன. பாலிவுட் படங்களை விடவும் 3 தென்னிந்தியத் திரைப்படங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளன.  அமீர் கானின் சீக்ரெட் சூப்பர்ஸ்டார், ஹிந்தி மீடியம் ஆகிய படங்கள் அடுத்த இரு இடங்களான 4,5 இடங்களைப் பிடித்துள்ளன. இந்தப் பத்து படங்களில் ஷாருக் கான், சல்மான் கான் படங்களுக்கு இடம் எதுவும் கிடைக்கவில்லை. விஜய்யின் மெர்சல் 9-வது இடத்தைப் பிடித்து தமிழ்த் திரையுலகுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

2017-ல் வெளியான இந்தியப் படங்களில் இந்த 10 படங்களும் ஐஎம்டிபி இணையத்தளத்தில் அதிக ரேட்டிங்குகளைப் பெற்றவை.

ஐஎம்டிபி: டாப் 10 பட்டியல்

1. விக்ரம் வேதா (Vikram Vedha)

2. பாகுபலி 2 (Baahubali 2: The Conclusion)

3. அர்ஜூன் ரெட்டி (Arjun Reddy)

4. சீக்ரெட் சூப்பர்ஸ்டார் (Secret Superstar)

5. ஹிந்தி மீடியம் (Hindi Medium)

6. தி காஸி அட்டாக் (The Ghazi Attack)

7. டாய்லெட் ஏக் பிரேம் கதா (Toilet - Ek Prem Katha)

8. ஜாலி எல்எல்பி 2 (Jolly LLB 2)

9. மெர்சல் (Mersal)

10. தி கிரேட் ஃபாதர் (The Great Father)


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory