» சினிமா » செய்திகள்

தனுஷின் மாரி 2 : இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம்

செவ்வாய் 26, டிசம்பர் 2017 10:11:14 PM (IST)தனுஷ் நடிக்கவுள்ள மாரி 2 படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

வடசென்னை மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களைத் தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள மாரி 2 படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ். இதில் நாயகனாக நடித்து, தயாரிக்கவும் உள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நாயகியாக சாய் பல்லவி, முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணா, வில்லனாக டோவினோ தாமஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதன் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

மாரி முதல் பாகத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார். அவரே இப்படத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்படுவாரா என்ற கேள்வி நிலவி வந்த நிலையில், தற்போது யுவன் இசையமைப்பாளர் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. 10 ஆண்டுகள் கழித்து தனுஷ் படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகவுள்ளது. மேலும், படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் இயக்குநர் பாலாஜி மோகன் ஈடுபட்டு வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory