» சினிமா » செய்திகள்

நடிகர் சங்க அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்கிறேன்: நாசருக்கு, எஸ்.வி.சேகர் கடிதம்

செவ்வாய் 9, ஜனவரி 2018 3:44:47 PM (IST)

நடிகர் சங்க அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

நடிகர் சங்க தலைவர் நாசருக்கு, நடிகர் எஸ்.வி.சேகர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘‘என்னை நடிகர் சங்க அறங்காவலர்களில் ஒருவனாக நியமித்து என்னுடைய அறிவுரை, ஆலோசனைகள், வழி நடத்துதல் தேவை என கேட்டுக்கொண்டீர்கள். ஆனால் ஒரு வருடத்தில் பல மாற்றங்கள். கையெழுத்திடுவதற்கு மட்டும் டிரஸ்டி என்ற நிலை வந்தபோது நான் பல மெயில்கள் அனுப்பியதற்கு எந்த பதிலும் அளிக்காமல் எனக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினீர்கள்.

என் பதில் கடிதத்தில் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. குறிப்பாக நம் நடிகர் சங்கம் 5 கிரவுண்டு அளவில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோட்டை ஆக்கிரமித்துள்ளதாக வந்த புகரைப்பற்றி கேட்டபோது கூட அப்படி ஒன்றுமே இல்லையென்று விஷாலும், கார்த்தியும் சொன்னார்கள். எதிர் தரப்பினர் உச்ச நீதிமன்றம் செல்வதாக அறிகிறேன்.

மலேசிய கலை விழாவிலும் பல குளறுபடிகள். பல கலைஞர்கள் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள் என தெரிந்து கொண்டேன். என் மனசாட்சிக்கு எதிராக நம் சங்கத்தின் சார்பில் நடக்கும் தவறுகளுக்கு நான் உடன்பட முடியாது என்பதாலும், அறங்காவலர் என்ற பதவி நடிகர் சங்கத்தை பொறுத்தவரையில் ஒரு அலங்காரப்பதவியாக கருதப்படுவதாலும், எனக்களிக்கப்பட்ட அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory