» சினிமா » செய்திகள்

வெற்றிகரமான 25 நாட்கள் : அருவி படம் சாதனை!

செவ்வாய் 9, ஜனவரி 2018 4:18:25 PM (IST)சமீபத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ள அருவி திரைப்படம் 110 திரையரங்குகளில்  25-வது நாளை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது.

சிறிய படங்கள் மூன்று நாள்கள் ஓடினாலே அது பெரிய விஷயமாகக் கருதுகிற தமிழ்த் திரையுலகில் எந்தவொரு பிரபல நடிகரும் நடிக்காமல் புதுமுக நடிகர், புதுமுக இயக்குநர் பங்களிப்பில் சத்தமில்லாமல் வெளிவந்த அருவி படம் பிரமாண்ட வெற்றியை அடைந்துள்ளது.

"ஜோக்கர்", "தீரன் அதிகாரம் ஒன்று" போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் "அருவி". அருண் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - பிந்து மாலினி & வேதாந்த் பரத்வாஜ். படவிழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற படம் சமீபத்தில் வெளியாகி, தனது 25-வது நாளை நிறைவு செய்துள்ளது.

தமிழகம் முழுக்க 110 திரையரங்குகளில் 25 நாள்கள் ஓடி சாதனை செய்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 12-ம் தேதி வரை திரையரங்குகளில் தொடர்ந்து ஓடும் என்பதே அருவி போன்ற சிறிய படத்தின் மகத்தான சாதனையாகக் கருதப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory