» சினிமா » செய்திகள்

சிம்பு, ஓவியா ரகசிய திருமணம்.? உண்மை வெளிவந்தது!!

செவ்வாய் 9, ஜனவரி 2018 5:04:41 PM (IST)சிம்பு, ஓவியா ரகசிய திருமணம் என்று வெளியான புகைப்படத்தின் பின்னனி ரகசியம் தெரியவந்துள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ஓவியா ஆரவை மீது காதல் கொண்டார். ஆனால் ஓவியாவின் காதலை ஏற்க மறுத்தார் ஆரவ். அதன் பின்பு நிகழ்ச்சியை விட்டு வெளியில் வந்து சில தினங்களுக்கு பின்பு சிங்கிளாக இருப்பது நிம்மதியாக இருப்பதாக கூறினார். தற்போது சிம்பு இசையில் ஓவியா மரண மட்டை பாடலை பாடியிருந்தார். ஓவியாவின் பாடலை அவரது ஆர்மிக்காரர்கள் ஹிட்டாக்கினர். சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஓவியா படங்கள், விளம்பர படங்கள் என்று பிசியாக உள்ளார். இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்துகின்றனர் 

இந்நிலையில், கடந்த தினங்களில் சிம்புவிற்கும், ஓவியாவிற்கும் ரகசிய திருமணமாகி விட்டதாக புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வந்தது. அப்புகைப்படத்தின் உண்மை நிலை தற்போது வெளியாகியுள்ளது. இப்புகைப்படம் இது நம்ம ஆளு பட புகைப்படத்தினை வைத்து மாற்றியமைக்கப்பட்ட புகைப்படமாகும். இரண்டு நாட்களாக ஓவிய ரசிகர்களை ஆட்டிப்படைத்த புகைப்பத்தில் உண்மையாக இருப்பது நயன். ஓவியா - சிம்பு திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரசிகர்கள் உண்மையான புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory