» சினிமா » செய்திகள்

மீண்டும் கே.வி.ஆனந்த் உடன் கூட்டணி: சூர்யா அறிவிப்பு

செவ்வாய் 9, ஜனவரி 2018 5:36:58 PM (IST)

மீண்டும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவிருப்பதாக சூர்யா உறுதி செய்திருக்கிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. தெலுங்கில் கேங் என பெயரில் வெளியாவதால் ஹதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் சூர்யா.

அப்போது, தனது அடுத்த படங்கள் குறித்த கேள்விக்கு, "செல்வராகவன் சார் படம் முடிவடைந்தவுடன் மீண்டும் கே.வி.ஆனந்த் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன்" என்று தெரிவித்திருக்கிறார் சூர்யா. இதன் மூலம் மீண்டும் சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது.

மேலும், இயக்குநர் ஹரி மற்றும் விக்ரம் குமார் இருவரோடும் அடுத்த படங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி படத்தை தயாரிக்க சில தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory