» சினிமா » செய்திகள்

இளையராஜாவின் ஜாதி பெயரை குறிப்பிட்ட பத்தாிகையை காாி துப்பிய கஸ்தூாி

சனி 27, ஜனவரி 2018 11:21:36 AM (IST)

இசைஞானி இளையராஜாவின் பெயரை ஜாதி பெயருடன் பிரசுரம் செய்த நாளிதழ் ஒன்றை நடிகை கஸ்தூாி காாி துப்பும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


இசைத்துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு நேற்று பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இது தொடா்பான செய்திகள் அனைத்து நாளிதழ்களிலும் பிரசுரமாகின. ஆனால் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இளையராஜாவின் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் அவரது ரசிகா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். மேலும் விருது பெற்ற செய்தியை மட்டும் வெளியிடாமல் அவரது ஜாதிப்பெயரை குறிப்பிட்டது மிகவும் கீழ்த்தரமான செயல் என்று ரசிகா்கள் கருத்து தொிவித்துள்ளனா். நடிகை கஸ்தூாி அந்த நாளிதழை காாி துப்புவதுடன் அதனை கிழித்து போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கஸ்தூாியின் இச்செயலுக்கு இளையராஜாவின் ரசிகா்கள் வரவேற்பு தொிவித்துள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory