» சினிமா » செய்திகள்

இணையத்தில் காலா பட சண்டைக்காட்சி: படக்குழு அதிர்ச்சி!!

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 11:06:02 AM (IST)

விரைவில் வெளியாகவுள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் "காலா" பட சண்டைக்காட்சி ஒன்று இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

கபாலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் காலா என்கிற கரிகாலன். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. நடிகர் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷின்டே, அருள் தாஸ், ஹூமா குரேஷி, திலீபன், ஈஸ்வரி ராவ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகிறது என்று இரு தினங்களுக்கு முன்னர் அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் ட்வீட் செய்தோருந்தார். இந்நிலையில் "காலா" பட சண்டைக்காட்சி ஒன்று இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். சுமார் அரை நிமிடம் ஓடும் அந்த விடியோவில் ரஜினிகாந்த் ஸ்டாண்ட் நடிகர் ஒருவரை தாக்குகிறார். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ள அதே வேளையில் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory