» சினிமா » செய்திகள்

முதல்முறையாக ரஜினி படத்திற்கு அனிருத் இசை!

வியாழன் 1, மார்ச் 2018 3:58:01 PM (IST)

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கு முதல்முறையாக அனிருத் இசையமைக்கவுள்ளார். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தைத் தயாரிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் சமீபத்தில் அறிவித்தது. காலா, 2.0 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள ரஜினி, அரசியல் பரபரப்புகளுக்கிடையே இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் உறவினரான அனிருத், முதல்முறையாக ரஜினி நடிக்கும் படத்துக்கு இசையமைக்கவுள்ளார். இதுவரை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயண் தான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படம் மூலமாக முதல்முறையாக கார்த்திக் சுப்புராஜும் அனிருத்தும் இணைகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory