» சினிமா » செய்திகள்

ரஜினியின் காலா டீசர் யூடியூப்பில் வெளியானது

வெள்ளி 2, மார்ச் 2018 10:37:49 AM (IST)


ரஜினியின் காலா பட டீஸரை தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்தின் யுட்யூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.

கபாலி" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் "கரிகாலன்" என்கிற "காலா". தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. நடிகர் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷின்டே, அருள் தாஸ், ஹூமா குரேஷி, திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரி ராவ், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் பிப்ரவரி 10-ந் தேதி ட்வீட் செய்தார். இச்செய்தி ரஜினி ரசிகர்களிடம் உற்சாகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், காலா டீஸரை  தனுஷ் தற்போது வெளியிட்டுள்ளார். அதில், "வேங்கை மகன் ஒத்தைல நிக்கேன், தில் இருந்தா மொத்தமா வாங்க லே!!!" என்கிற பஞ்ச் டயலாக் பேசியுள்ளார் ரஜினி. மும்பை தாராவியில் வாழும் நெல்லைத்  தமிழராக நடித்துள்ள ரஜினிகாந்த் நெல்லைத் தமிழில் பேசி அசத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory