» சினிமா » செய்திகள்

சூர்யா நடிக்கும் என்.ஜி.கே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

திங்கள் 5, மார்ச் 2018 7:30:05 PM (IST)



நடிகர் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் படத்திற்கு என்.ஜி.கே என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 36-ஆவது படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் சூரியாவுக்கு ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளனர். பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார்.இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா திங்கள் மாலை 5 மணிக்கு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory