» சினிமா » செய்திகள்

இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார் சன்னி லியோன்!!

செவ்வாய் 6, மார்ச் 2018 4:38:03 PM (IST)



வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து நடிகை சன்னி லியோன் - டேனியல் தம்பதியர் பெற்றோர் ஆகி உள்ளனர்.

இந்தியில் ஜிஸ்ம் 2 படம் வழியே அறிமுகம் பெற்று ராகினி எம்.எம்.எஸ். 2 வழியே பிரபலமடைந்த நடிகை சன்னி லியோன்.  அதன்பின் ஹேட் ஸ்டோரி 2, ஏக் பஹெலி லீலா உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.  தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். கடந்த வருடம் நடிகை சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியல் வெபர் இருவரும் நிஷா என்ற பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த தம்பதி வாடகை தாய் மூலம் 2 ஆண் குழந்தைகளை பெற்றுள்ளனர். இதுபற்றி சன்னி லியோன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இது உண்மையில் கடவுளின் திட்டம்!  இதுபோன்ற ஒரு பெரிய அழகான குடும்பம் கிடைக்கும் வாய்ப்பினை பெற போகிறோம் என்று எங்களுக்கு தெரியாது.  நாங்கள் மகிழ்ச்சியை கடந்த நிலையில் உள்ளோம்.  எங்களது வாழ்வில் 3 அதிசயங்கள் கிடைத்துள்ளன.  உண்மையில் கடவுளின் ஆசியை பெற்றுள்ளோம்.  எங்களது குடும்பம் நிறைவடைந்து உள்ளது.

டேனியல் மற்றும் எனது மரபணுக்களை கொண்டு வாடகை தாய் வழியே குழந்தை பெற்று கொள்ள முடிவெடுத்தோம்.  ஆஷர் மற்றும் நோவா ஆகியோர் எங்களது உயிரியல் குழந்தைகளாக உள்ளனர்.  எங்கள் குழந்தைகள் பிறக்கும்வரை அவர்களை சுமப்பதற்கு தேவதை ஒன்றை கடவுள் எங்களுக்கு அனுப்பி உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

லியோன் தனது இன்ஸ்டாகிராமில் 3 குழந்தைகளுடன் இருப்பது போன்ற குடும்ப படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.  அதில், எங்களது குழந்தைகள் கடந்த சில வாரங்களுக்கு முன் பிறந்துள்ளனர்.  ஆனால் பல வருடங்களுக்கு எங்களது இருதயங்கள் மற்றும் கண்களில் அவர்கள் வாழ்ந்து வருவர்.  எங்களுக்காக கடவுள் சில சிறப்புடைய விசயங்களை திட்டமிட்டு உள்ளார்.  பெரிய குடும்பத்தினையும் அளித்து உள்ளார்.  3 அழகான குழந்தைகளுக்கு நாங்கள் பெற்றோர் என பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory