» சினிமா » செய்திகள்

சூப்பர் ஸ்டார் பட்டத்தைத் துறந்தார் ரஜினிகாந்த்!!

வியாழன் 8, மார்ச் 2018 12:37:13 PM (IST)

ட்விட்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்று இருந்த ஐடி, ரஜினிகாந்த் என மாற்றப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு ட்விட்டரில் இணைந்தார் ரஜினிகாந்த். ஆனால், 2014ஆம் ஆண்டுதான் முதல் ட்வீட்டையே பதிவிட்டார். முதல் மூன்று ட்வீட்டுகளில், ட்விட்டரில் அவரை வரவேற்ற ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ரஜினி, நான்காவது ட்வீட்டாக நரேந்திர மோடி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுவரை 116 ட்வீட்டுகளைப் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், ஒரு ரீட்வீட் கூட செய்யவில்லை. 45 லட்சத்துக்கும் அதிகனோர் அவரை ஃபாலோ செய்ய, அவரோ வெறும் 24 பேரை மட்டுமே பின்தொடர்கிறார். நரேந்திர மோடியின் இரண்டு கணக்குகள், அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ், அனிருத், செளந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரைத் தவிர மற்ற எல்லாமே செய்தி நிறுவனங்களைத்தான் அவர் பின்தொடர்கிறார்.

ரஜினியின் ட்விட்டர் ஐடி, @superstarrajini என இருந்தது. தற்போது அதில் உள்ள சூப்பர் ஸ்டாரைத் தூக்கிவிட்டு ரஜினிகாந்த் என மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது, @rajinikanth என்று மாற்றியிருக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் இணைந்தார். அதிலும், Rajinikanth என்றே உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory