» சினிமா » செய்திகள்

அஜித்தை நேரில் பார்க்க ஆவலோடு இருக்கிறேன்: ரோபோ சங்கர்

சனி 10, மார்ச் 2018 12:53:54 PM (IST)

விசுவாசம் பட ஷூட்டிங்கில் அஜித்தை நேரில் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார். 
 
அஜித் – சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் விசுவாசம். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். தம்பி ராமையா, யோகிபாபு ஆகியோர் காமெடியன்களாக நடிக்க, ரோபோ சங்கரும் தற்போது இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளார்.

படம் முழுக்க அஜித் கூடவே வரும் கேரக்டரில் நடிக்கிறார் ரோபோ சங்கர். இதற்காக கிட்டத்தட்ட 50 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இதுவரைக்கும் நான் அஜித்தை நேரில் பார்த்தது இல்லை. முதல்நாள் ஷூட்டிங்கில்தான் பார்க்கப் போறேன். பயங்கர எதிர்பார்ப்போடவும், ஆவலுடன் அவரைப் பார்க்கக் காத்திருக்கேன். இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டதற்குப் பலன் கிடைத்திருக்கிறது. மாரிக்குப் பிறகு அமைந்த மிகப்பெரிய படம் இது. கண்டிப்பா எனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்கிறார் ரோபோ சங்கர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory