» சினிமா » செய்திகள்

நடிகையின் பலாத்கார வீடியோ பிரதி வேண்டும்: கேரள ஐகோர்ட்டில் திலீப் மனு தாக்கல்

ஞாயிறு 11, மார்ச் 2018 4:18:18 PM (IST)

கேரளாவில் ஓடும் காரில் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் நடிகையின் வீடியோ பிரதியை தனக்கு வழங்க வேண்டும் என்று நடிகர் திலீப் கூறியுள்ளார்.

கேரளாவில் பிரபல நடிகை ஓடும் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் அந்த காட்சி வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கடத்தல் தொடர்பாக ரவுடி பல்சர் சுனில் உள்பட குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய தூண்டியதாக பிரபல மலையாள நடிகர் திலீப்பும் கைதானார். கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி கைது செய்யப்பட்ட அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். சுமார் 3 மாத ஜெயில் வாசத்திற்கு பிறகு தற்போது நடிகர் திலீப் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த வழக்கு கொச்சியில் உள்ள அங்கமாலி கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில் அங்கமாலி கோர்ட்டில் நடிகர் திலீப் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ பிரதியை தனக்கு வழங்க வேண்டும் என்று நடிகர் திலீப் கேட்டுக்கொண்டிருந்தார்.இந்த மனுமீதான விசாரணை நடந்தபோது அரசு தரப்பு வக்கீல் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வீடியோ பிரதியை நடிகர் திலீப்புக்கு வழங்கினால் அதை அவர் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும் அது பாதிக்கப்பட்ட நடிகையின் சுதந்திரத்தை பாதிக்கும் என்றும் அவர் கோர்ட்டில் வாதாடினார். இதைதொடர்ந்து திலீப்பின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது.

இந்த நிலையில் நடிகர் திலீப் சார்பில் அவரது வக்கீல் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். அதில் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் நடிகையின் வீடியோ பிரதியை தனக்கு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார். இந்த மனுமீதான விசாரணை வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory