» சினிமா » செய்திகள்

ஸ்டிரைக் எதிரொலி அஜித் பட ஷூட்டிங் தள்ளிவைப்பு

ஞாயிறு 11, மார்ச் 2018 4:26:28 PM (IST)

ஸ்டிரைக் காரணமாக அஜித் - நயன்தாரா   பட ஷூட்டிங்  தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

‘விவேகம்’ படத்தை அடுத்து அஜித்குமார், ‘விசுவாசம்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சிவா டைரக்டு செய்கிறார். இருவரும் ஏற்கனவே ‘வீரம்,’ ‘வேதாளம்,’ ‘விவேகம்’ ஆகிய 3 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். 4-வது முறையாக, ‘விசுவாசம்’ படத்தில் இணைகிறார்கள். 

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இதில், அஜித்குமார் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரங்களில் ரோபோ சங்கர், யோகி பாபு ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு வருகிற 23-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. பட அதிபர்கள் ‘ஸ்டிரைக்’ காரணமாக, ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory