» சினிமா » செய்திகள்

அஜித்தின் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேவியின் கணவர்!!

செவ்வாய் 13, மார்ச் 2018 4:40:36 PM (IST)

அஜித் நடிக்கும் அடுத்த படத்தை ‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தை, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித் -சிவா தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தை, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு என 3 பேர் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடிக்க இந்தப் படத்தில் கமிட்டாகியுள்ளனர்.

‘விசுவாசம்’ படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கியவர் வினோத். அரவிந்த் சாமி, த்ரிஷா நடித்துள்ள ‘சதுரங்க வேட்டை 2’ படத்தின் கதையையும் இவர்தான் எழுதியிருக்கிறார். அஜித் – வினோத் இணையும் இந்தப் படத்தை, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். மறைந்த ஸ்ரீதேவிக்கும், அஜித்துக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது. அதனால்தான் ஸ்ரீதேவி கேட்டுக் கொண்டதற்காக ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory