» சினிமா » செய்திகள்

ஹன்சிகா மீது நடிகர் சங்கத்தில் மோசடி புகார்!!

செவ்வாய் 13, மார்ச் 2018 5:34:30 PM (IST)

நடிகை ஹன்சிகா மீது அவருடைய மேனேஜர் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பாலிவுட்டில்  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமான ஹன்சிகா, பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ‘எங்கேயும் காதல்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர். தொடர்ந்து ‘மாப்பிள்ளை’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சிங்கம் 2’, ‘ஆம்பள’, ‘குலேபகாவலி’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

ஜெயம் ரவி, தனுஷ், விஜய், உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சித்தார்த், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், சிம்பு, பிரபுதேவா என தமிழின் முன்னணி மற்றும் இளம் நடிகர்கள் பெரும்பாலானோருடன் ஜோடியாக நடித்துவிட்டார். மணிரத்னத்தின் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துவரும் ‘துப்பாக்கி முனை’ மற்றும் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் ஆகியவற்றில் தற்போது நடித்து வருகிறார் ஹன்சிகா.

இந்நிலையில், அவரிடம் மேனேஜராகப் பணிபுரிந்த முனுசாமி என்பவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், இதுவரை தான் பணியாற்றியதற்கான சம்பளத்தை ஹன்சிகா வழங்கவில்லை என்றும், அதைப் பெற்றுத் தரும்படியும் கூறியுள்ளார் முனுசாமி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory