» சினிமா » செய்திகள்

என் மகள் சினிமாவில் நடிக்கவில்லை: கவுதமி மறுப்பு

புதன் 14, மார்ச் 2018 5:04:53 PM (IST)

என் மகள் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என கவுதமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி. இந்தப் படத்தை, வர்மா என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கின்றனர். பாலா இயக்கும் இந்தப் படத்துக்கு, ஜோக்கர் ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். இந்தப் படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். 

அவருக்கு ஜோடியாக நடிகை கவுதமி மகள் சுபலட்சுமி நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதை மறுத்துள்ளார் கவுதமி. "என் மகள் நடிக்கப் போவதாக வெளியான செய்திகளைப் பார்த்தேன். சுபலட்சுமி தற்போது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இப்போது அவர் நடிப்பதாக இல்லை. உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களுக்கும் நன்றி” என ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் கவுதமி


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்

திங்கள் 17, செப்டம்பர் 2018 12:05:03 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory